கேரளாவில் ரத்தம் கொடுத்து உதவ இளைஞர்களுக்கு அழைப்பு

கேரளத்தில் தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்துள்ள நிலையில், இன்று (25ம் தேதி) கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கேரளாவில், 105 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 72,460 பேர் கண்காணிப்பில் உள்ளனர். அதில், 467 பேர் மருத்துவமனையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வீடுகளின்றி சாலையோரம் வசிப்போர் பாதுகாப்பாக தங்கவும், அவர்களுக்கு உணவு வழங்கவும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்கும்.